தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமம் ஜெகநாதபுரம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமத்தில் தற்போது வரை பொது மயான வசதி இல்லை என்பதால், உயிரிழந்தவர்களின் உடல்களை இக்கிராமத்திற்கு அருகே உள்ள வன்னிப்பட்டி கிராமத்தில் உள்ள மயானத்தில்தான் தகனம் செய்து வருகின்றனர்.
கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு என்று பொது மயான வசதி வேண்டும் என்று கூறி பல ஆண்டுகளாக வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறுப்படுகிறது. வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கும் செல்வதற்கு சரியான பாதை இல்லமால் ஆற்றை கடந்து ஜெகநாதபுரம் மக்கள் உடல்களை கொண்டு சென்று தகனம் செய்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் அவ்வழியாக மிகவும் சிரமப்பட்டு கொண்டு செல்கின்றனர். வன்னியம்பட்டி வழியாக உடல்களை கொண்டு செல்ல அக்கிராம மக்கள் அனுமதி தருவதில்லை என்பதால் ஜெகநாதபுரம் மக்கள் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த 90 வயதான முதியவர் பெரியசாமி என்பவர் நேற்று முன்தினம்(30-08-2022) உயிரிழந்த நிலையில் அவரது உடலை, வழக்கம் போல அருகே உள்ள வன்னிப்பட்டி மயானத்தில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
ஆனால் பலத்த மழை பெய்து பாதை சேறும் சகதியுமாக இருந்தது மட்டுமின்றி ஓடையிலும் தண்ணீர் இருந்த காரணத்தினால் வன்னிப்பட்டி ஊர் வழியாக முதியவர் உடலை கொண்டு செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு வன்னிப்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் இரு கிராம மக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
Also see... மின் கட்டணத்தை உயர்த்த தடை: தமிழக அரசு மனு இன்று விசாரணை
இதையெடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விளாத்திகுளம் வட்டாட்சியர் சசிக்குமார், டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் அரசு அதிகாரிகள் இரு கிராம மக்கள் இடையே பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் வன்னிப்பட்டி கிராம மக்கள் தங்கள் ஊருக்குள் வழியாக கொண்டு செல்ல தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு முறை மட்டும் சுற்றி வந்து உடலை தகனம் செய்யுங்கள், ஒருவாரத்திற்குள் ஜெகநாதபுரம் கிராமத்திற்கு ஒரு வார காலத்திற்குள் பொது மயானம் அமைத்து தரப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தை தொடர்ந்து ஜெகநாதபுரம் மக்கள் முதியவர் உடலை சேறும், சகதியும் நிறைந்த பாதையில் சென்று ஓடையில் உள்ள நீரை சிரமத்துடன் கடந்து சென்று தகனம் செய்தனர்.
அரசு அதிகாரிகள் உறுதியளித்த படி தங்கள் ஊருக்கு பொது மயானம் அமைத்து தர வேண்டும் என்று ஜெகநாதபுரம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: மகேஷ்வரன், தூத்துக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dead body, Kovilpatti