முகப்பு /செய்தி /தூத்துக்குடி / வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

வீடு புகுந்து குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளை - தூத்துக்குடியில் பகீர் சம்பவம்

முகமூடி அணிந்து கொண்டு வீட்டில் கொள்ளை

முகமூடி அணிந்து கொண்டு வீட்டில் கொள்ளை

Tuticorin News : விளாத்திகுளம் அருகே குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் பறித்த நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வீட்டுக்குள் புகுந்து  ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ், இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி இவர் தனது7 வயதான மகன் ரித்தீஷ், ஒன்றரை வயது மகள் சாதனா ஆகியோருடன் கவுண்டம்பட்டியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு நேரத்தில் சத்தம் கேட்டு ராமலட்சுமி விழித்தபோது, முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் பீரோவை உடைக்க முயற்சித்து கொண்டிருந்தனர். ராமலட்சுமியை பார்த்த அவர்கள், தூங்கி கொண்டு இருந்த குழந்தையின் கழுத்தில் கத்தியை காண்பித்து மிரட்டி அவரிடமிருந்து 3.5 பவுன் தங்க நகை மற்றும் 5,000 பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.

இதையும் படிங்க:  ராமஜெயம் வாழ்க்கையில் ‘விளையாடிய’ கிரிக்கெட்? எஸ்.ஐ.டி. விசாரணையால் பரபரப்பு

இதுகுறித்து அவர் சங்கரலிங்கபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதற்கிடையில் அந்த முகமூடி மனிதர்கள் அப்பகுதியில் பல வீடுகளில் திருட முயற்சி செய்து உள்ளனர். அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

top videos
    First published:

    Tags: CCTV Footage, Crime News, Local News, Tuticorin