ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

Themma Themma Reels : ’இனிமேல் வீடியோ போடமாட்டோம்..’ - குத்தாட்டம் போட்டு மன்னிப்பு கேட்ட தூத்துக்குடி 2K கிட்ஸ்! 

தெம்மா தெம்மா பாடல் ரீல்ஸ்

தெம்மா தெம்மா பாடல் ரீல்ஸ்

themma themma reels : இன்ஸ்டா ரீல்ஸ் வைரல் ஆசையில் தெம்மாடி காத்தே பாட்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் செல்பி முனையத்தின் மீது ஏறி குத்தாட்டம் போட்ட இளைஞர்களை போலீசார் பிடித்துள்ளனர். - ரீல்ஸ் ஆசை சிக்க வைத்தது எப்படி?

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இணையத்திலும், இளைஞர்கள் மத்தியிலும் தற்போது ட்ரெண்ட் இந்த தெம்மாடி காத்தே பாடல் தான்... இந்த பாடலுக்கு வீடியோ போடவேண்டும் என்ற ஆசையில் தூத்துக்குடி 2கே கேங் ஒன்று போட்ட குத்தாட்டம் அவர்களை சிக்கலில் சிக்கவைத்துள்ளது.

  ரௌடி பேபி சூர்யா,திருச்சி சாதனா, வணக்கமுங்கோ ஷூலா, திவ்யா கள்ளச்சி இவர்களை நினைவிருக்கிறதா? டிக்டாக் காலத்தில் இவர்கள் படுத்தியபாடு அப்பப்பா என்று இணையத்தையே முகம் சுழிக்க வைத்தது. டிக்டாகிற்கு மூடுவிழா கொண்டாப்பட்டாலும் தற்போது இன்ஸ்டா ரீல்ஸ், யூடியூப் சாட்ஸ் என பல அவதாரங்கள் வந்து விட்டது. இவற்றில் , யாரோ ஒரு பாட்டிற்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டால் சில நேரங்களில் அது வைரலாகி விடுகின்றது.

  சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மச்சான் எப்ப வர போற என்ற மல்லிப்பூ பாடல்.....சொல்லுங்கு மாமாகுட்டி பாடலும் இந்த வகையில் இணையத்தில் வைரல் ஆனது. இப்படி வைரல் ஆகும் பாடலுக்கு இணையவாசிகள் பலர் தங்கள் நடன திறமையை காட்டி அசத்துவதும் வாடிக்கை. நடனதிறமை உள்ளவர்கள், நடிப்பு திறன் உள்ளவர்கள் என பலர் வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் இதற்கு நேர் எதிர்மாறாக சில வைரல் வைப்ரன்ட்களும் இருக்கத்தான் செய்கின்றன. இப்படி தற்போது வைப் ஆகியிருப்பதுதான் 2004 ஆம் ஆண்டு வந்த ரைன் ரைன் கம் எகென் என்ற மழையாளப்படத்தில் வந்த தெம்மாடி காத்தே பாடல். இடுப்பை முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு ஒரு கேங்கோடு அடுவதுதான் இந்த வைரல் ரீலின் ட்ரெண்ட். பாடல் பிரீத் மழையாளத்தில் இந்த பாடல் இருந்தாலும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என்று இந்தியாவையும் கட்டந்து தற்போது வெளிநாட்டவரையும் கவர்ந்துள்ளது இந்த தெம்மாடி காத்தே பாடல். இப்படி ட்ரெண்டாகியுள்ள இந்த ரீலுக்கு நமது தூத்துக்குடி புள்ளீங்கோ சிலர் ஆடிய ஆட்டம் மிகப்பிரபலம்.

  பாடல் பிரீத் தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் மாநகராட்சி சார்பில் "நம்ம தூத்துக்குடி" என்ற வாசக செல்ஃபி பாயிண்ட் உள்ளது. இந்த தூத்துக்குடி எழுத்தின் மீது ஏறி தொம்மாங்கு காத்தே பாடலுக்கு குத்துதாட்டம் போட்டவர்களின் நடனம் வைரல் ஆனது. ஆனால் நடனமாடிய இளைஞர்கள் ஆபாச சைகைகளுடன், அரசு கட்டிடத்தில் இப்படி ஆடுவது பார்ப்பவர்களை முகம்சூழிக்க வைத்தது. வைபில் ஆடிய இளைஞர்களின் வீடியோ விவகாரம் தூத்துக்குடி சைபர் க்ரைம் போலீசார் பார்வைக்கு சென்றது.

  இதையடுத்து விசாரணையை மேற்கொண்ட போலீசார் இணைய முகவரியை வைத்து குத்தாட்டம் போட்ட இளைஞர்களை பிடித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இது போன்ற வீடியோக்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த போலீசார் பிடிபட்டவர்களை அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். செல்பி முனையத்தில் இடுப்பை ஆட்டி குத்தாட்டம் போட்ட மாணவர்கள் தற்போது அதே இடத்தில் நெட்டுக்குத்தாக நின்று மன்னிப்பு கேட்கும் வீடியோவும் வைரல் ஆகியுள்ளது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Dance, Instagram, Viral Video