ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து.. மகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்..

ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து.. மகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சோகம்..

விபத்திற்குள்ளான ஆட்டோ

விபத்திற்குள்ளான ஆட்டோ

தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி மகன் மற்றும் மகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் மகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி மல்லிகா. இவர் இன்று தன் மகள் சேர்மக்கனி மற்றும் மகன் முத்துவேலுடன் மருத்துவமனைக்குச் செல்வதற்காக பனையூரில் இருந்து  விளாத்திகுளத்திற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது துளசிப்பட்டி விலக்கில் விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த  தனியார் பேருந்தும் ஆட்டோவும் மோதி விபத்திற்குள்ளானது. இதில் முற்றிலும் நசுங்கியது. ஆட்டோவில் இருந்த மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் மற்றும் மகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்நிலையில் விபத்து ஏற்பட்டவுடன் பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விளாத்திகுளம் போலீசார் உயிரிழந்த மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தனியார் பஸ் டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் சிக்கி மகன் மற்றும் மகள் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த பகுதியில் தனியார் பேருந்துக்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Accident, Auto, Bus accident