ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

தூத்துக்குடியில் முதியவர் படுகொலை.. மர்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடியில் முதியவர் படுகொலை.. மர்மகும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

கொலை செய்யப்பட்ட முதியவர் பாண்டி

கொலை செய்யப்பட்ட முதியவர் பாண்டி

Tuticorin Murder Case | தூத்துக்குடியில் முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடியில் முதியவரை கத்தியால் குத்திக் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி கிருபை நகர் 5 வது தெருவை சேர்ந்த உச்சிமாகாளி மகன் பாண்டி (வயது 59). இவர் அப்பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை தூத்துக்குடி முனியசாமி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மர்ம கும்பல் வழிமறித்து சராமாரியாக கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த தென்பாகம் காவல் நிலைய  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாண்டியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை செய்யபட்ட பாண்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பின்னர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொலை நடந்த சம்பவ இடத்திற்கு டவுன் டிஎஸ்பி சத்யராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

செய்தியாளர்: முரளி கணேஷ்

First published:

Tags: Crime News, Local News, Tuticorin