ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

ஆளுநரை இழிவாக ஒருமையில் பேசுவது தான் திராவிட மாடலா? நடிகை குஷ்பு கேள்வி

ஆளுநரை இழிவாக ஒருமையில் பேசுவது தான் திராவிட மாடலா? நடிகை குஷ்பு கேள்வி

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குஷ்பு

Tuticorin Airport Kushboo Press Meet | தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது போல் செயல்படுகிறார் என பாஜக  தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ குற்றச்சாட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு  மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தமிழக முதல்வர் கண்ணை மூடிக்கொண்டு செயல்படுவது போல் செயல்படுகிறார்.  தமிழகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறுவதாக குற்றச்சாட்டினார்.

ஈஷா மையத்தில் சுபஸ்ரீ  உயிரிழந்துள்ளார் முறையாக விசாரணை நடத்த வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம். ஈசாவுக்கு என்று ஒரு சட்டம் நமக்கு என்று ஒரு சட்டம் எதுவும் கிடையாது. முறையாக விசாரணை நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்ட குஷ்பு, சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி ஒருமையில் இழிவாக பேசி உள்ளார்.

இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது தான் திராவிடமாடலா என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமை ஆவது குறித்து மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசு மட்டுமல்ல அனைவரும் ஒன்றிணைந்து தான் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்: முரளி கணேஷ்

 

First published:

Tags: BJP, Kushboo, Tuticorin