ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

மேலாளரின் கையெழுத்திட்டு வங்கியில் நூதன மோசடி: 4 பேர் அதிரடி கைது!

மேலாளரின் கையெழுத்திட்டு வங்கியில் நூதன மோசடி: 4 பேர் அதிரடி கைது!

கைது செய்யப்பட்ட 4 பேர்

கைது செய்யப்பட்ட 4 பேர்

Tuticorin Gold loan fraud case | வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை நகை உரிமையாளருக்கு தெரியாமல் வங்கி அடமான அட்டையில் வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு மோசடி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை வங்கி மேலாளர் போன்று போலி கையொப்பமிட்டு நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி குலசேகரபட்டினம் இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் நகை மதிப்பீட்டாளராக படுக்கப்பத்து பகுதியை சேர்ந்த  சுடலை (எ) சுடலைராஜ் (48) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்த நிலையில் வங்கியில் நகைக் கடன் பெற வரும் வாடிக்கையாளர்களின் தங்க நகைகளை அவர்கள் கேட்கும் கடன் தொகைகைய விட அதிகமான கடன் தொகைக்கு அடமானம் வைத்து வந்துள்ளார் சுடலைராஜ்.

பின்னர் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை நகை உரிமையாளருக்கு தெரியாமல், வங்கி அடமான அட்டையில் வங்கி மேலாளரின் கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு நகைகளை திருப்பி, அவரது கூட்டாளிகளான  குமாரவேல் (41), ராம்குமார் (32) மற்றும் குலசேகரபட்டினம் வடக்கூர் பகுதியை சேர்ந்த  ரமேஷ் (42) உள்ளிட்டோர் பெயர்களில் அதிக தொகைக்கு அடமானம் வைத்துள்ளார்.

இதன் மூலம் சுடலைராஜ், ரூ.9 லட்சத்து 75 ஆயிரத்து 786 பணத்தையும் 55 பவுன் தங்க நகைகளையும் கையாடல் செய்துள்ளனர். இதனை அறிந்த வங்கி கிளையின் மேலாளார் சங்கரசுப்பிரமணியன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து சுடலை ராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரை பிடிக்க மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.

இதனையடுத்து  சுடலைராஜ், ரமேஷ், குமாரவேல் மற்றும் ராம்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Indian Bank, Local News, Tuticorin