ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

வல்லநாடு வனத்தில் பட்டாம்பூச்சி திருவிழா.. மான்,மயில்களை ஆர்வமாக கண்டுகளித்த கனிமொழி எம்.பி

கனிமொழி

கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி திருவிழாவை பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி திருவிழாவை பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

தென் மாவட்டங்களில் முதன்முறையாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி திருவிழா தொடங்கியுள்ளது.  இதையொட்டி பல்வேறு போட்டிகளும் நடக்கிறது. இயற்கை தந்த அழகுகளில் வண்ணத்துப்பூச்சிகளும் ஒன்று. அதுவும் கூட்டமாக பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளையும் மலர்களையும் சுற்றி வரும் போது இறக்கை அழகும், தேன் உண்ணும் காட்சியும் கண்களுக்கு குளுமையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தரும். அவற்றின் இயற்கை வர்ணங்கள் கற்பனை செய்ய முடியாத காட்சியாக இருக்கிறது.

பட்டாம்பூச்சி என்று அழைக்கப்படும் இந்த வண்ணத்துப்பூச்சிகள் அனைத்து பகுதிகளிலும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 20000 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் உள்ளன.  அந்த வகையில் தான் தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் வெளிமான் சரணாலயம் அமைக்கப்பட்டு இங்கு வெளிமாண்கள் பல்வேறு விதமான பறவை இனங்கள் மற்றும்  80 வகையான  வண்ணத்துப்பூச்சிகள் காணப்படுகின்றன.

இந்த வண்ணத்துப்பூச்சிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடமும் மாணவ மாணவிகளையும் ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் வண்ணத்துப்பூச்சி திருவிழா வல்லநாட்டில் நடைபெற்றது. இந்த வண்ணத்துப்பூச்சி திருவிழாவை பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

கனிமொழி

தொடர்ந்து வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மான்கள், பட்டாம்பூச்சிகள், மயில்கள் அனைத்தையும் தொலைநோக்கி மூலமாகவும் கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் பார்வையிட்ட கனிமொழி எம்பி இது குறித்து அதிகாரியிடம் கேட்டு அறிந்தார்.

கனிமொழி

தொடர்ந்து கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி பள்ளி மாணவ மாணவிகள் சார்பில் வண்ணத்துப்பூச்சி குறித்த விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாடகங்களை பார்வையிட்டார். தொடர்ந்து வண்ணத்துப்பூச்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்ட அவர் பள்ளி மாணவி மாணவிகள் எடுத்துக் கொண்டார். வண்ணத்துப்பூச்சிகள் குறித்த புத்தகத்தையும் கனிமொழி எம்பி வெளியிட்டார்.

மேலும் இங்கு அமைக்கப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் குறித்த கண்காட்சியையும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ்,  தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: முரளி கணேஷ் (தூத்துக்குடி)

First published:

Tags: Kanimozhi, Local News, Tamil News, Tuticorin