ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

அண்ணாமலை இருக்கும் மேடையில் ஏறுவீர்களா.. ஏறினால் கால் இருக்காது - சசிகலா புஷ்பா பேச்சால் பரபரப்பு

அண்ணாமலை இருக்கும் மேடையில் ஏறுவீர்களா.. ஏறினால் கால் இருக்காது - சசிகலா புஷ்பா பேச்சால் பரபரப்பு

சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

Sasikala Pushpa : மக்களுக்கு செய்யும் நல்ல விஷயத்தில் கமிஷன் வாங்கினால் எங்கள் தலைவர் பேசத்தான் செய்வார்.  மேடை ஏறி பாருங்கள் கால் இருக்காது எச்சரித்த சசிகலா புஷ்பா.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

முதல்வர், அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் மேடைக்கு நாங்கள் ஏறுவோம் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேசியிருந்த நிலையில்,  தூத்துக்குடியில் நடந்த பாஜக கிறிஸ்துமஸ் விழாவில்  எங்கள் தலைவர் அண்ணாமலை  வந்தால் மேடையில் கூட ஏறுவார்களாம். ஏறுங்கள்,  ஏறிப் பாருங்கள் வீட்டில் இருந்து வெளி வரும்போது கால் இருக்காது என தூத்துக்குடியில் சசிகலா புஷ்பா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா கலந்துக்கொண்டார். அப்போது பேசியவர், “ எங்கள் மாநிலத்தலைவர் பார்த்து சுயபுராணம் பாடுகிறார் என்று சொல்கிறார் அமைச்சர் கீதா ஜீவன். சுயபுராணம் பாடுவதற்கு அவருக்கு தகுதி இருக்கிறது. அவருக்கு புராணம் இருக்கிறது. அவர் ஏழை குடும்பத்தில் பிறந்து ஐபிஎஸ் அதிகாரியாக வெற்றிவாகை சூடியவர். சுயபுராணம் பாடுவதற்கு முழு தகுதியும் பெற்ற தலைவர் அவர்.

எங்கள் தலைவருக்கு குற்றவாளியை பிடித்து சென்று தான் பழக்கம். குற்றவாளியாக நின்று பழக்கம் கிடையாது. 24 மணி நேரமும் தமிழகத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு அரசியல் அதிசயத்தை பார்த்து ஏளனம் செய்கிறீர்கள்.  அமைச்சர் கீதா ஜீவன் திமுக மாவட்ட செயலாளராகி விட்டாராம். அதனால் தான் தலைகால் புரியாமல் ரவுடி போல் பேசி தான் ஆக வேண்டும் என்று பேசுகிறார். உங்க அப்பாவை அடக்கி உட்கார வைத்தவர்கள் நாங்கள்.   இப்போது கூட உங்களை நாங்கள் போங்கள் என்று பேசுகிறோம் என்றால் அது எங்களுக்கு பாஜக சொல்லிக் கொடுத்த நல்ல பண்பு என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Also Read: ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி... கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி

காவல் தலைவன் இன்று மக்கள் தலைவனாக உருவாகி இருக்கிறார். தலைவர் அண்ணாமலையை பார்க்க தெருவிலும் அலையலையாக பாய்கிறது கூட்டம். கூட்டம் எம்ஜிஆருக்கு நின்றது, ஜெயலலிதா அம்மாவிற்கு நின்றது. அடுத்தபடியாக அண்ணாமலைக்கு இன்று கூட்டம் நின்று கொண்டிருக்கிறது. அவரைப் பற்றி பேசுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

எங்கள் தலைவர் அண்ணாமலை  வந்தால் மேடையில் கூட ஏறுவார்களாம். ஏறுங்கள்,  ஏறிப் பாருங்கள் வீட்டில் இருந்து வெளி வரும்போது கால் இருக்காது.  அது யாராக இருக்கட்டும். மேடையில் ஏறுவார்களாம் என்ன தைரியம். ஒரு அரசியல் கட்சி என்றால் கொள்கை ரீதியாக போராட வேண்டும். வாதாட வேண்டும். உங்கள் கொள்கையை நீங்கள் பேசுங்கள். எங்கள் கொள்கையை நாங்கள் பேசுகிறோம்.

பாஜக கிறிஸ்துமஸ் விழா

நீங்கள் ஏமாற்றுவதை நாங்கள் சொல்லுவோம். உங்கள் ஊழலை நாங்கள் சொல்லுவோம். அழுகிய முட்டையை நாங்கள் சொல்லிவிட்டோமாம் . அழுகிய முட்டை கொடுத்தால் அழுகிய முட்டை என்று சொல்லத்தான் செய்வோம். நீங்கள் சமூக நலத்துறை என்ற அமைச்சர் பெயரை வைத்துக் கொண்டு சமூக நலத்தை பேனவே இல்லை.

நீங்கள் மக்களுக்காக என்ன செய்தீர்கள்? காண்ட்ராக்டிலும் டென்டரிலும் போட்டி போட்டு எல்லோரும் கொள்ளையடிக்கிறீர்கள். நீங்கள் அழுகிய முட்டையை கொடுத்தது உண்மை. உங்களை அழுகிய முட்டை அமைச்சர் என்று சொல்லத்தான் செய்வோம்.

முட்டையில் கமிஷன் வாங்காதீர்கள். மக்களுக்கு செய்யும் நல்ல விஷயத்தில் கமிஷன் வாங்கினால் எங்கள் தலைவர் பேசத்தான் செய்வார்.  மேடை ஏறி பாருங்கள், மறுபடியும் சொல்கிறேன் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது கால் இருக்காது. எங்கள் தலைவனை பற்றி பேசினால் நாக்கு இருக்காது. தெரிந்து கொள்ளுங்கள். ” எனப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: முரளிகணேஷ் ( தூத்துக்குடி)

First published:

Tags: Annamalai, BJP, DMK, Local News, Sasikala Pushpa, Tamil News, Thoothukudi, Tuticorin