ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

தூத்துக்குடியில் சமூகஆர்வலரை கொலை செய்ய முயற்சி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தூத்துக்குடியில் சமூகஆர்வலரை கொலை செய்ய முயற்சி.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

Tuticorin Crime News : விலையுயர்ந்த ஆடி காரில் வந்த ரியல் எஸ்டேட் தொடர்புடைய நபர் இவர் மீது காரை மோத முயற்சி செய்து மிரட்டி சென்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடியில் கஞ்சாவிற்கு எதிராக போராடிய சமூக ஆர்வலரை கொலை செய்ய முயற்சி செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடியில் சார் பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது  இந்த கட்டிடத்தை தனியார் சிலரின் சுயநலத்திற்காக 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப் பகுதியில் இடமாற்றம் செய்ய சிலர் முயற்சி நடந்தது வருகிறது. இதனால் பொதுமக்களுக்குபாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர் குணசீலன் வியாபாரிகள், அரசியல் கட்சியினர் என பலரையும் ஒன்றிணைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருவதோடு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைகளும் பொது நல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று உடன்குடி ஆர்.சி.சர்ச் அருகில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இவரை விலையுயர்ந்த ஆடி காரில் வந்த ரியல் எஸ்டேட் தொடர்புடைய நபர் இவர் மீது காரை மோத முயற்சி செய்து மிரட்டி சென்றுள்ளனர். இதையடுத்து உடன்குடி குணசீலன் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் கஞ்சா விற்பனைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் கொடூரமாக ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்ய முயற்சி நடந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர் : பி.முரளிகணேஷ் 

First published:

Tags: Crime News, Local News, Tamil News, Tuticorin