ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருநங்கைகளை தாக்கி கூந்தலை வெட்டி வீசிய இளைஞர்கள்.. தூத்துக்குடியில் கொடூர சம்பவம்!

திருநங்கைகளை தாக்கி கூந்தலை வெட்டி வீசிய இளைஞர்கள்.. தூத்துக்குடியில் கொடூர சம்பவம்!

முடியை வெட்டிய சம்பவம்

முடியை வெட்டிய சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமடை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திருநங்கைகளை சில இளைஞர்கள் தாக்கி, அவர்களது கூந்தலை அறுத்து கொடுமைப்படுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

  தூத்துக்குடி மாவட்டம் கழுகுமடை அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில் இரண்டு திருநங்கைகளை ஒரு இளைஞர் கொடூரமாக தாக்கி கூந்தலை வெட்டி வீசுகிறார். அருகே மற்றுமொரு திருநங்கை காயங்களுடன் அமர்ந்து இருக்கிறார். மற்றொரு நபர் இந்த சம்பவத்தை வீடியோ எடுக்கிறார்.

  Also Read: சினிமாவில் நடிக்க வைப்பதாக அழைத்து வந்து நரபலி.. பெண்களின் உடல்களை வெட்டி சாப்பிட்ட கொடூரம்..!

  இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து பலரும் திருநங்கைகளை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டுமென சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

  தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் அனன்யா, மகேஷ் ஆகிய திருநங்கைகள் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தாக்குதல் வீடியோ வைரலாகியதை அடுத்து மற்ற திருநங்கைகள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் தற்போது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Crime News, Transgender, Tuticorin