ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது.. அக்டோபர் 30ல் சூரசம்ஹாரம்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது.. அக்டோபர் 30ல் சூரசம்ஹாரம்.

திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயில்

Tiruchendur | வரும் 30ஆம் தேதி சூரசம்காரம் நடைபெறுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur) | Thoothukkudi (Thoothukudi)

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.

    இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனையும் உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளிகிறார்.

    யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி ஆரம்பமாகிறது. 6 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமி சாலைக்கு  எழுந்தருளும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

    இதையும் படிங்க | தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக இபிஎஸ் மீது நடவடிக்கை என்ற கோரிக்கை நியாயமானது... கனிமொழி பேட்டி...

    விழாவில் சிகர நாளான 30ஆம் தேதி சூரசம்காரம் நடைபெறுகிறது. இதனையொட்டி மாவட்ட காவல் துறை சார்பில் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Murugan temple, Tiruchendur