ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா... தங்க சப்பரத்தின் முன்பு கோலாட்டம் அடித்த பெண்கள்...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா... தங்க சப்பரத்தின் முன்பு கோலாட்டம் அடித்த பெண்கள்...

கந்தசஷ்டி
கோலாட்டம்

கந்தசஷ்டி கோலாட்டம்

இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், கேரளா உள்பட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் தொடங்கினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம், வருகிற 30ம் தேதி நடக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் 3ம் நாளான நேற்று நேர்ச்சையாக பெண் பக்தர்கள் தங்க சப்பரத்தின் முன்பு கோலாட்டம் அடித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா.  இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25 ஆம் தேதி யாகசாலையுடன் தொடங்கியது.

  தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும்  இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள பக்தர்கள் கோவில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

  கந்த சஷ்டி மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று இரவு தங்கச் சப்பரத்தின் முன்பு வேண்டுதலாக பெண் பக்தர்கள் முருகன் பாடலுக்கு கோலாட்டம் அடித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

  Also see...கந்தசஷ்டி 2022 : விரதம் இருக்கும் முறை மற்றும் பலன்கள் என்னென்ன?

  கிரி பிரகாரம் முழுவதும் தங்கச் சக்கரம் செல்லும் பொழுது சப்பரத்திற்கு முன்பு நின்று வட்டமாக கோலாட்டம் அடித்து முருகனை வழிபட்டனர்.

  செய்தியாளர்:பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kandha Sashti, Murugan