ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திமுகவை வீழ்த்த திமுகவால்தான் முடியும்.. கனிமொழி அதிரடி பேச்சு!

திமுகவை வீழ்த்த திமுகவால்தான் முடியும்.. கனிமொழி அதிரடி பேச்சு!

கனிமொழி

கனிமொழி

kanimozhi | திமுகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில், திமுகவினருக்கு எம்.பி. கனிமொழி அறிவுரை வழங்கினார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India

திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுகவின் திருச்செந்தூர் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயல்வீரர்கள் கூட்டம்  நடைபெற்றது.

இதில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உட்பட திமுகவின் திருச்செந்தூர் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய கனிமொழி எம்.பி., வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி. திமுகவை வீழ்த்த திமுகவை தவிர வேறு யாராலும் முடியாது. திமுகவை எதிர்த்து வெற்றி பெற யாராலும் முடியாது என தெரிவித்தார்.

நமக்குள்ளே கருத்து வேறுபாடுகள், பிரிவினைகள், பிரச்சனைகள், சச்சரவுகள் வந்துவிடக் கூடாது. அதனைப் புரிந்து கொண்டு தேர்தலில் நாம் செயல்பட வேண்டும். நமது குடும்பத்திற்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் . ஆண், பெண் வித்தியாசம் வந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரையும் தன் உடன் பிறப்புகள் என்று அழைத்தவர் கருணாநிதி. தமிழ்நாட்டை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்ளும் அதிமுக, திராவிட இயக்கமாக இல்லை. நமது வீட்டுப் பிள்ளைகள் படிக்கக் கூடாது கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது, மருத்துவராக கூடாது எல்லாவற்றிலும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்து நுழைத்திருக்கக்கூடிய பாஜகவுடன் அதிமுக கைகோர்த்துள்ளது. அதனால் தமிழ்நாட்டை காப்பாற்றக் கூடிய கடமை திமுகவில் உள்ள அனைவருக்கும் உள்ளது என பேசினார்.

மேலும், தமிழ்நாட்டை காக்க நாம் அத்தனை பேரும் ஒற்றுமையாக நின்று தேர்தலை சந்திக்க வேண்டும், இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

செய்தியாளர்: முரளி கணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: DMK, Kanimozhi, Local News, Thoothukudi, Tiruchendur