ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்.. கடவுள் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்.. கடவுள் வேடம் அணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன்..

திருச்செந்தூர்

திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchendur (Thiruchendur), India

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை முதலே கோவில் குவிந்த பக்தர்கள் இரவில் கடவுள் வேடங்கள் அணிந்தும்,  அக்கினி சட்டி எடுத்தும், முருகன் பாடல்களுக்கு பக்தி பரவசத்துடன் நடனமாடியும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

  முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் முக்கியமான திருவிழா கந்த சஷ்டி திருவிழா. இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25 ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து தினமும் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை,  தங்கத் தேர்பவனி என ஆறு நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் விழாவின் சிகரனாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.

  இதையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து நேற்று மாலை முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் பரமசிவன், பார்வதி, விநாயகர், நாரதர் முருகன் உள்ளிட்ட கடவுள்களின் வேடங்கள் அணிந்து முருகன் பாடல்களை பாடி கோயில் வளாகத்தில் பவனியாக வந்தனர். மேலும், அக்னி சட்டி எடுத்தும், கிரி பிரகாரத்தில் முருகனின் பாடல் மேளத்திற்கு ஆண்கள் பெண்கள் என அனைத்து பக்தர்களும் பக்தி பரவசத்துடன் நடனமாடி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.

  Also Read:  மதுரை, ராமேஸ்வரம், திருப்பதிக்கு கம்மி விலை ஆன்மீக டூர் பேக்கேஜை அறிவித்த ஐஆர்சிடிசி!

  இந்நிலையில் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளுக்கு உள்பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். வழக்கமாக நடைபெறும் சோதனை என்றாலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோவில் முழுவதும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தங்களது சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

  செய்தியாளர் : முரளிகணேஷ் (தூத்துக்குடி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Soorasamharam, Tamil News, Thiruchendur