முகப்பு /செய்தி /தூத்துக்குடி / அரசு பள்ளியில் மாணவர் மர்ம மரணம்... திருச்செந்தூரில் பயங்கரம்!

அரசு பள்ளியில் மாணவர் மர்ம மரணம்... திருச்செந்தூரில் பயங்கரம்!

உயிரிழந்த சிறுவன்

உயிரிழந்த சிறுவன்

TIruchendur Death | தலைமை ஆசிரியை மாணவர்களை கட்டாயப்படுத்தி பராமரிப்பு வேலைகளை செய்ய வைத்த போது மாணவர்கள் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur) | Thoothukkudi (Thoothukudi)

தூத்துக்குடி மாவட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியை மாணவர்களை கட்டாயப்படுத்தி பராமரிப்பு வேலைகளை செய்ய வைத்த போது, 5ம் வகுப்பு மாணவர் தலையில் பலத்த காயமடைந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் அஜய்குமார் அங்குள்ள அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பள்ளியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. பள்ளி வளாகத்தில் வளர்த்திருக்கும், செடிகளை அகற்றுவதற்காக மாணவர்கள் சிலரை தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகியோர் பள்ளிக்கு வரவழைத்துள்ளனர்.

அஜய்குமார் உள்ளிட்ட சில மாணவர்கள் பள்ளி சென்று வேலை செய்துவிட்டு, ஒற்றையடிப்பாதை வழியாக பள்ளியின் முன்புறத்திற்கு வந்துள்ளனர். அப்போது திடீரென பெரும் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதில் மாணவர் அஜய்குமாருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அஜய்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவரின் மரணத்திற்கான காரணம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Crime News, Death, Thoothukudi, Tiruchendur