தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் காப்பர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த ஆலை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆலையை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து 2018ம் ஆண்டு மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
இதை எதிர்த்து ஆலையை திறக்க வேண்டும் என கோரிக்கையுடன் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆலை மூடலுக்கான அரசின் உத்தரவு தொடரும் தீர்ப்பளித்த வேதாந்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. கொரோனா அதிகரித்த காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜனை இலவசமாக வழங்க ஸ்டெர்லைட் நிறுவனம் முன் வந்த நிலையில், அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்படி, 3 மாதம் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆலை மூடப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் பராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
Must Read : 10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தெரிந்துகொள்வது எப்படி?

ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை விளம்பரம்
இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய வேதாந்தா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் அமைந்துள்ள நவீன ஸ்மெட்டல் அண்ட் ரிஃபைனிங் காம்ப்ளெக்ஸ் விற்பனை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விளம்பபரங்கள் செய்தித்தாள்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
உங்கள் நகரத்திலிருந்து(Thoothukudi)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.