முகப்பு /செய்தி /தூத்துக்குடி / இரட்டை கொலைக்கு சாட்சியாக இருந்தவரின் தலையை துண்டித்த ரவுடி.. தூத்துக்குடியில் பயங்கரம்!

இரட்டை கொலைக்கு சாட்சியாக இருந்தவரின் தலையை துண்டித்த ரவுடி.. தூத்துக்குடியில் பயங்கரம்!

உயிரிழந்த சின்னதுரை - ரவுடி சுயம்புலிங்கம்

உயிரிழந்த சின்னதுரை - ரவுடி சுயம்புலிங்கம்

தலைமறைவான ரவுடி சுயம்புலிங்கம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) | Thoothukkudi | Tamil Nadu

தூத்துக்குடியில் இரட்டை கொலை வழக்கில் சாட்சியாக இருந்தவரின் தலையை துண்டித்து கொலை செய்த ரவுடி நீதிமன்றத்தில் தாமாகவே சரணடைந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அருகே உள்ளது வடக்கு சிலுக்கன்பட்டி. இங்குள்ள தனியாருக்கு சொந்தமான ஆடு வளர்ப்பு பண்ணையில் கடந்த 12ஆம் தேதி தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த மீன் வியாபாரி சின்னத்துரை(31) தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தாங்கியூரை சேர்ந்த பிரபல ரவுடி சுயம்புலிங்கம்,  திருப்பூரில் தம்பதியை கொலை செய்து கொள்ளையடித்த தங்க நகையை சின்னத்துரையிடம் கொடுத்து விற்க கூறியுள்ளார்.அதை சின்னத்துரையும் விற்று கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சுயம்புலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்த திருப்பூர் போலீசார் இந்த வழக்கில் சின்னத்துரையை சாட்சியாக சேர்த்துள்ளனர்.

ALSO READ | திருமாவளவனுக்கு எதிராக ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் கோஷமிட்டதால் பரபரப்பு

இந்த நிலையில்  ஜாமீனில் வெளியே வந்திருந்த சுயம்புலிங்கம் சின்னதுரையை அந்த வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். மிரட்டியும் கேட்காததால் சின்னத்துரையை கொலை செய்ய திட்டமிட்ட சுயம்புலிங்கம் சின்னதுரையிடம் லாபகரமாக பேசி வடக்கு சிலுக்கன்பட்டியில் உள்ள ஆட்டுப்பண்ணைக்கு அவரை மது குடிக்க அழைத்து வந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது சுயம்புலிங்கம் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து சின்னத்துரையின் தலையை துண்டித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இந்த கொலையில் சுயம்புவுக்கு உடந்தையாக இருந்த மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த  மாரிகிருஷ்ணன்(30),   தூத்துக்குடி அண்ணா நகர் பத்தாவது தெருவை சேர்ந்த தீபன்ராஜ் (30),  அரசரடி பனையூரை சேர்ந்த முத்துவேல்(37) ஆகிய மூன்று பேரையும் தட்டப்பாறை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான சுயம்புலிங்கம் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த தட்டப்பாறை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இரட்டைக் கொலை வழக்கிலிருந்து தப்பிக்க மூன்றாவது கொலை செய்துள்ள சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Crime News, Murder, Thoothukudi