Home /News /thoothukudi /

ஓசியில் பார்சல் தராததால் தகராறு... புரோட்டா மாஸ்டரை வெட்டி கொன்ற மர்ம கும்பல்

ஓசியில் பார்சல் தராததால் தகராறு... புரோட்டா மாஸ்டரை வெட்டி கொன்ற மர்ம கும்பல்

ஓசியில் பார்சல் தராததால் தகராறு

ஓசியில் பார்சல் தராததால் தகராறு

ஓசியில் பார்சல் தராததால் புரோட்டா மாஸ்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தூத்துக்குடியில் ஓசியில் பார்சல் தராததால் ஏற்பட்ட தகராறில், புரோட்டா மாஸ்டரை மர்ம கும்பல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூத்துக்குடி, ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தப்பன் மகன் கருப்பசாமி, இவர் தூத்துக்குடி 3வது மைல் அரசு மருத்துவக் கல்லூரி அருகே காமராஜ் நகரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணியளவில் மதுபோதையில் ஹோட்டலுக்கு வந்த 3பேர் ஓசியில் பார்சல் கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை தாக்கியுள்ளனர். இதையடுத்து கடையின் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வரும் முடிவைத்தானேந்தல், ஓதுவார் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் பொன் செந்தில் முருகன் (31) உட்பட ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை தட்டிக் கேட்டுள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.

    இந்நிலையில் கடையில் வியாபாரம் முடிந்து கடை ஊழியர்களான பொன்செந்தில் முருகன், மற்றும் திரவிய ரத்தினம் நகரைச் சேர்ந்த பர்னபாஸ் மகன் தேவராஜ் (39), சாயர்புரம் ரைஸ்மில் தெரு முருகேசன் மகன் சாமுவேல் (37), அப்பகுதியில் பால்பூத் நடத்தி வரும் பிரையன்ட் நகர் 13வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் பழனி முருகன் (55) ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆசிரியர் காலனி அருகே சென்றபோது 5பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து அரிவாளால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பொன் செந்தில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேவராஜ், பழனிமுருகன், சாமுவேல் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    ALSO READ | சென்னை மாநகர பேருந்துகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்! - ராமதாஸ் அறிக்கை

    இதுகுறித்து தகவல் அறிந்து தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்செந்தில் முருகன் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனை்ககு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தை எஸ்.பி பாலாஜி சரவணன், டிஎஸ்பி சத்தியராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த கொலை தொடர்பாக தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராாஜாராம் வழக்குப்பதிந்து 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Crime News, Tuticorin

    அடுத்த செய்தி