ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

பிளாஸ்டிக் லைட்டர்கள் தடை செய்யப்படுமா..? தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கை..!

பிளாஸ்டிக் லைட்டர்கள் தடை செய்யப்படுமா..? தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கை..!

லைட்டர்

லைட்டர்

Matchbox manufacturers Request | தீப்பெட்டி தயாரிக்கும் தொழிலில் நேரடியாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 90 விழுக்காடு பேர் பெண்கள் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) | Thoothukkudi

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிகளில் 90 சதவிகிதம் தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளிலும், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சாத்தூர், சிவகாசி சுற்றுப் பகுதிகளிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் சுற்றுப் பகுதிகளிலும், வேலூர் மாவட்டம் குடியாத்தம், காவேரிபூம்பட்டினம் ஆகிய பகுதிகளிலும் தீப்பெட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தியாகும் தீப்பெட்டிகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகின்றன. மேலும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இத்தொழிலில் நேரடியாக 4 லட்சம் பேரும், மறைமுகமாக 2 லட்சம் பேரும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக 90 விழுக்காடு பேர் பெண்கள் உள்ளனர்.

தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கும் வகையில், மத்திய அரசு அளித்து வரும் வெளிநாட்டு ஏற்றுமதிக்கான ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல, தீப்பெட்டி தொழிலை பாதிக்கும் லைட்டருக்கு கட்டாயம் தடைவிதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

அட்டைக்குச்சி, புளூமேச் பேப்பர், மெழுகு, குளோரேட், பாஸ்பரஸ், சல்பர் உட்பட 14 மூலப்பொருள்களைக் கொண்டு தீக்குச்சி, தீப்பெட்டி தயார் செய்யப்படுகிறது. இவைகளின் விலை எவ்வித கட்டுப்பாடும் இல்லமால் உயர்ந்து கொண்டே வரும் நிலையில் லைட்டர் பிரச்னையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் விரும்புகின்றனர்.

செய்தியாளர்: மகேஷ்வரன், கோவில்பட்டி.

First published:

Tags: Kovilpatti, Local News, Thoothukudi