ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

லாரியில் இருந்து வந்த கயிறு.. பைக்கில் சென்றவரின் கழுத்தை சுற்றி தூக்கி வீசிய கொடூரம்!

லாரியில் இருந்து வந்த கயிறு.. பைக்கில் சென்றவரின் கழுத்தை சுற்றி தூக்கி வீசிய கொடூரம்!

விபத்து சிசிடிவி காட்சிகள்

விபத்து சிசிடிவி காட்சிகள்

Thoothukudi | சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) | Thoothukkudi

தூத்துக்குடியில் லாரியில் இருந்து சரிந்த கயிறு சாலையில் பைக்கில் சென்றவரின் கழுத்தை சுற்றி தூக்கி வீசிய பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியை சேர்ந்த முத்து(30) நேற்று இருசக்கர வாகனத்தில் ஏரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே உரம் ஏற்றி வந்த லாரியின் ஒரு மூடை சரிந்து கீழே விழவும் அதில் இருந்த கயிறு இருசக்கர வாகனத்தில் சென்ற முத்துவின் கழுத்தில் சுற்றி பைக்கில் இருந்து கீழே இழுத்துப் போட்டது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் முத்துவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் படுகாயமடைந்த முத்து கழுத்து அறுபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்கும் வீடியோ  காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ் தூத்துக்குடி.

First published:

Tags: Accident, Local News, Thoothukudi