முகப்பு /செய்தி /தூத்துக்குடி / பட்டப்பகலில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை : தூத்துக்குடியில் பயங்கரம்!

பட்டப்பகலில் வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை : தூத்துக்குடியில் பயங்கரம்!

பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

Tuticorin Lawyer Murder | கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக  வழக்கறிஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் இவரது சகோதரர் அத்திப்பழம் என்பவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக ராஜேஷ் மற்றும் முத்துகுமார் குடும்பத்தினருடைய முன் விரோதம் இருந்துள்ளது.  இதை அடுத்து 2019 ஆம் ஆண்டு முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் நீதிமன்றம் முன்பு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் வழக்கறிஞர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சோரிஸ் புறத்தில்  உள்ள தனது நகை அடகு கடைக்கு காரில் வந்துள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கும் போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கீழே இழுத்துப் போட்டு ஓட ஓட விரட்டி அவரது அலுவலகம் முன்பு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளது செய்து தப்பியோடியது.

இதைத்தொடர்ந்து அந்தப் பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் சிப்காட் போலீசார் உடனடியாக வந்து அந்தப் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 2019ம் ஆண்டு கொலையான சிவாவின் சகோதரர் வழக்கறிஞர் முத்துக்குமார்,  இந்த கொலை வழக்கில் தீவிர கவனம் செலுத்தியதன் அடிப்படையில் கொலையில் கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை ஜாமினில் வெளிவர முடியவில்லை சிறையிலேயே இருந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் இன்று மர்ம கும்ப கும்பல் வழக்கறிஞர் முத்துக்குமாரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளது இந்த முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.  ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்: பி.முரளி கணேஷ்

First published:

Tags: Crime News, Local News, Tuticorin