தமிழகத்தின் தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவில் உள்ளது. தமிழகத்தின் தென் பழனி என்று அழைக்கப்படும் கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான தைப்பூச திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல்பூஜை, விளாபூஜை, காலசாந்தி பூஜைகள் நடைபெற்றது. இதையெடுத்து கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சியும், கொடி மரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து கழுகாசலமூர்த்தி, வள்ளி,தெய்வானைக்கும், சோமாஸ் கந்தர், அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவினை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் அடுத்த மாதம் 5ந்தேதி நடைபெறுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Murugan temple, Tamil News, Thai Month, Thaipusam, Tuticorin