ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

தூத்துக்குடியில் 10 கிலோ போலி ஹெராயின் வைத்திருந்தவரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை..

தூத்துக்குடியில் 10 கிலோ போலி ஹெராயின் வைத்திருந்தவரிடம் போலீசாரிடம் தீவிர விசாரணை..

கைது செய்யப்பட்ட நபர்

கைது செய்யப்பட்ட நபர்

Tuticorin Fake Heroin seized | தூத்துக்குடியில் பிடிபட்டவர் போலி ஹெராயின் போதை பொருளை ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய் என்று கூறி சிலரிடம் விற்பனை செய்ய இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடியில்  போலி ஹெராயின் வைத்திருந்த இளைஞரை பிடித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், டவுன் டிஎஸ்பி சத்யராஜ் மேற்பார்வையில் தனிப்படை போலீசார்  ரோந்து சென்றபோது, எஸ்எஸ்  தெரு, மார்க்கெட் அருகே சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போழுது அவரிடம் ஹெராயின் போன்ற பொருள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் அந்த இளைஞரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 கிலோ போலி ஹெராயினை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்த ரீகன் (42) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து தலா ஒரு கிலோ எடை கொண்ட 10 பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்து பரிசோதித்தில் அது பொருள் யூரியா உரம் போன்று இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த பொருளை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ரீகன், யூரியா உரம் போன்ற பொருளை, போலீயாக ஹெராயின் போதை பொருள் என்றும், ஒரு கிலோ ஒரு லட்சம் ரூபாய் என்றும் கூறி சிலரிடம் விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட ரீகனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

செய்தியாளர்: பி.முரளிகணேஷ்

First published:

Tags: Local News, Tuticorin