முகப்பு /செய்தி /தூத்துக்குடி / சொந்த தங்கையை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்த அண்ணன்... சொத்து தகராறில் வெறிச்செயல்!

சொந்த தங்கையை ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்த அண்ணன்... சொத்து தகராறில் வெறிச்செயல்!

தூத்துக்குடி இரட்டை கொலை

தூத்துக்குடி இரட்டை கொலை

Thoothukudi | சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட முன்பகையால் சொந்த தங்கையை சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) | Thoothukkudi

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக தங்கை மற்றும் தங்கையின் கணவரை ஓட ஓட விரட்டி  கொன்ற அண்ணன் மற்றும் அவரது மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி அண்ணா நகர் ஆறாவது தெருவை சேர்ந்த ராம்குமார் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள், அதே பகுதியில் வசித்து வரும் தனது அண்ணன் முருகேசன் என்பவரின் வீட்டை விலைக்கு வாங்கி குடியிருந்து வருகிறார். இந்த வீட்டை விலைக்கு வாங்கியது தொடர்பாக மாரியம்மாள் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் முருகேசன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் அண்ணாநகர் ஆறாவது தெருவில் வைத்து ராம்குமாரை ஓட ஓட விரட்டி கொன்றுவிட்டு வீட்டிலிருந்த அவரது மனைவி மாரியம்மாளை சொந்த தங்கை என்றும் பாராமல் இருவரும் சேர்ந்து வெட்டி படுகொலை செய்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், 2 சடலங்களையும் கைப்பற்றி கொலை செய்த இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Crime News, Double murder, Local News, Thoothukodi