ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

மாணவர்களுக்கான காலை உணவு திட்டம்.. பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுக்கான காலை உணவு திட்டம்.. பள்ளிகளுக்கு திடீர் விசிட் அடித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர்

மாணவர்களுக்கு உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர்

Tuticorin Collector | காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு தயாரிக்கும் மைய உணவு கூடத்தினையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி  நகராட்சியில் காலை உணவு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

 

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தினை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ந்தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பங்களாதெருவில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி, காந்திநகர், ஸ்டாலின் காலனியில் உள்ள நகராட்சி பள்ளிகள் என 3 பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  திடீரென பங்களா தெருவில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டத்தினை ஆய்வு செய்தார். பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவின் தரத்தினை ஆய்வு செய்ததது மட்டுமின்றி, குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உணவு பரிமாறினார். மேலும் உணவு சுவையாக உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து காலை உணவு வழங்கும் திட்டத்தில் உணவு தயாரிக்கும் மைய உணவு கூடத்தினையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். அது மட்டுமின்றி உணவு தயாரிக்கப் பயன்படுத்தி வரும் உணவு பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

First published:

Tags: Local News, Tamil News, Tuticorin