ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகள்..

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடிகள்..

2 ஜோடிகள் தஞ்சம்

2 ஜோடிகள் தஞ்சம்

Thoothukudi | சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் இரு காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi) | Thoothukkudi

தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் இரு காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியை சேர்ந்த முத்துமாரி என்ற பெண்ணும் கருங்கடல் பகுதியை சேர்ந்த சாத்தராக் என்ற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த இருவரும் கடந்த 8-ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இருவர்களது குடும்பத்தினரும் காவல் நிலையத்தில் காணவில்லை என புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, சாத்தான்குளம் போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சாத்தராக் மற்றும் முத்துமாரி தம்பதியினர் காவல் நிலையம் வந்து தங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றதாகவும், பின்னர் 4 நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் போலீசாரிடம் கூறினர்.

இதன் அடிப்படையில் பயிற்சி உதவியாளர் வெங்கடேஷ் இருவரின் குடும்பத்தினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்த இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பத்தின் பேரில் இருவரையும் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க | லாரியில் இருந்து வந்த கயிறு.. பைக்கில் சென்றவரின் கழுத்தை சுற்றி தூக்கி வீசிய கொடூரம்!

இதேபோல பேய்குளம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மற்றும் தேர்க்கன்குளம் பகுதியை சேர்ந்த சேர்மலட்சுமி என்ற இளம் பெண்ணும் காதலுக்கு வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 8-ம் தேதி தங்களது வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளனர். இது குறித்து புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீசார் புகாரை பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர்.இந்த நிலையில்  இருவரும்  பெற்றோருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

உடனே போலீசார் இரு தரப்பினரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருவரும் மேஜர் என்பதால் சாத்தான்குளம் போலீசார் அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

First published:

Tags: Local News, Lovers, Thoothukudi