Home /News /thoothukudi /

தூத்துக்குடி துறைமுகத்தை இலவசமாக சுற்றிப் பார்க்கனுமா..? வ.உ.சி. பிறந்தநாளில் சிறப்பு ஏற்பாடு..

தூத்துக்குடி துறைமுகத்தை இலவசமாக சுற்றிப் பார்க்கனுமா..? வ.உ.சி. பிறந்தநாளில் சிறப்பு ஏற்பாடு..

வ.உ.சி துறைமுகம்

வ.உ.சி துறைமுகம்

இந்தியாவின் முதன்மையான 12 துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தூத்துக்குடியில் அமைந்துள்ளது. 1974ஆம் ஆண்டு இந்தியாவின் முதன்மை துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
    சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுகத்தை இலவசமாக சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்துள்ளது துறைமுகத்தின் நிர்வாகம்.

    தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சியின் 151வது பிறந்தநாள் செப்டம்பர் 5, 2022ஆம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதை கொண்டாடும் விதமாக, தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை சுற்றிப்பார்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வ.உ.சி துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 5ஆம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை பொதுமக்கள் இலவசமாக துறைமுகத்தை சுற்றிப்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    இந்தியாவின் முதன்மையான 12 துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகம் தூத்துக்குடியில் அமைந்துள்ளது. 1974ஆம் ஆண்டு இந்தியாவின் முதன்மை துறைமுகமாக அறிவிக்கப்பட்ட இதற்கு கடந்த 2012 ஆண்டு சுந்திர போராட்ட வீரர் வ.உ.சி நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.

    இதையும் வாசிக்க: மோசமான நிதிநிலைமையை வைத்துக் கொண்டு எதற்கு இலவசம் எனும் ஏமாற்று? முதல்வருக்கு சீமான் கேள்வி

    1868ஆம் ஆண்டு முதலே இந்த துறைமுகம் இயங்கி வருகிறது. மர தூண் மற்றும் திருகாணி தூண் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த துறைமுகம். நங்கூரம் பாய்ச்சி கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு பின்னர், சிறு கப்பல் மூலம் நிலத்திற்கு கொண்டு வர இந்த துறைமுகம் பயன்பட்டது.

    இவ்வாறான வரலாற்று சிறப்புமிக்க இந்த துறைமுகத்தை கண்டு ரசிக்க வரும் திங்கட்கிழமையன்று பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: History tour, Tamilnadu, Thoothukudi

    அடுத்த செய்தி