ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்'

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - போலீஸ் அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட்'

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்

Thoothukkudi | தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டரும், தற்போதைய நெல்லை மாநகர உதவி ஆணையராக திருமலையை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக பணியாற்றிய திருமலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா கெஜதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2018 ஜூன் மாதம் 4ம் தேதி முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் ஒப்படைத்தது. இந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

  இந்நிலையில்,  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 காவல் ஆய்வாளர்களான திருமலை, சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். திருமலை தற்போது திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அண்மையில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தது.

  ' isDesktop="true" id="822635" youtubeid="ftsLIZq3p-c" category="thoothukudi">

  அதில் அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி உள்ளிட்ட 21 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அப்போதைய காவல் ஆய்வாளர் திருமலையை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

  Also see... பாம்பன் பாலத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..

  பணியிடை நீக்க உத்தரவு திருமலைக்கு நேரில் வழங்கப்பட்டது. இவரை தொடர்ந்து காவல் ஆய்வாளர்களான சுடலைக்கண்ணு, சங்கர், சதீஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Gun shoot, Police suspended, Thoothukudi