ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

5 மாத குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி - தாய் உள்ளிட்ட 4 பேர் அதிரடி கைது

5 மாத குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி - தாய் உள்ளிட்ட 4 பேர் அதிரடி கைது

குழந்தையை விற்று கைதானவர்கள்

குழந்தையை விற்று கைதானவர்கள்

தூத்துக்குடியில் பணத்திற்காக 5 மாத பெண் குழந்தையை விற்பனை செய்த தாய் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruchendur (Thiruchendur), India

திருச்செந்தூர் பகுதியில் வசிக்கும் மாரீஸ்வரி கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து 2வது கணவருடன் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளார். அவருடனும் பிரச்னை ஏற்பட்ட நிலையில் 5 மாத குழந்தையுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்செந்தூருக்கு வந்துள்ளார். வறுமையின் காரணமாக குழந்தையை வளர்க்க முடியாத நிலையில், காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில், மாரீஸ்வரி மற்றும் அவரது தாயார் அய்யம்மாளை தொடர்பு கொண்ட மாரியப்பன், சூரியம்மா ஆகியோர் குழந்தையை விற்பனை செய்ததால் 5 லட்ச ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், 4 பேரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: கடந்த 7 மாதங்களாக கொரோனா உயிரிழப்பு இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்: மா.சுப்பிரமணியன்

 பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மாரீஸ்வரி ஏற்கெனவே முதல் கணவருக்கு பிறந்த ஆண் குழந்தையை ஒன்றரை லட்சத்திற்கு விற்பனை செய்துவிட்டு, உறவினர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்ப பெற்றுக்கொண்டதும் தெரியவந்தது.

First published:

Tags: Crime News, Local News, Tamil News, Tuticorin