திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஷ்வ ரூப தரிசனமும் 4 மணிக்கு உதய மார்த்தாண்டம் அபிஷேகமும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, கோயம்புத்தூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் முருகனை வழிபட காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக மார்கழி மாதம் தொடங்கிய நாள் முதலில் இருந்தே எண்ணற்ற பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோவிலை நோக்கி பாதையாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்..
இவ்வாறு வர கூடிய பக்தர்கள் தனது சொந்த ஊர்களில் இருந்து கால் கடக்க வெகு தூரம் நடைபயணம் மேற்கொண்டு பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும், முருகன் கோவிலுக்கு வந்து வெளி பிராகாரங்களில் அங்க பிரதட்சணம் செய்தும் பல்வேறு நேர்த்தி கடன்களை செலுத்தியும் வருகின்றனர்.
ஜனவரி முதல் இன்று தமிழக அரசு சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கட்டுப்பாடுகள் வித்திக்கப்பட்டிருந்தாலும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இதுவரை பக்தர்களுக்கு என்று எந்த ஒரு கட்டுபாடுகளும் விதிக்கபடவில்லை ஆனாலும் கணக்கில் அடங்காத கூட்டம் கோவிலில் அலை மோதுவதால் திருச்செந்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை முதலே திருவிழா காலங்களில் பக்தர்கள் கூடுவது போன்று வழக்கத்திற்கு மாறாகவே அதிக படியான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் திருச்செந்தூர் டிஎஸ்பி ஆவுடையப்பன் தலைமையில் அதிக அளவில் காவல் துறையினர் கோவில் வளாகம் கடற்கரை பகுதிகள் மற்றும் நகர் முழுவதுமே குவிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tiruchendur