தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வந்த காங்கிரஸ் கட்சி சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு அக்கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், “காங்கிரஸ் கட்சி போன்ற தேசிய கட்சி மக்களை சந்திப்பது நல்ல விஷயம், ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்வது காங்கிரஸ் கட்சிக்கு வலுசேர்க்கும், கட்சிக்கு பலம், பொது மக்கள், தொண்டர்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கட்சி தலைமைக்கு கிடைக்கும்,கட்சியின் நிலைப்பாட்டை மக்கள் தெரிந்து கொள்ள முடியும், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் என்ன பாதிப்புகள் சமுதாயத்திற்கு வந்துள்ளது என்பதனை எடுத்த சொல்ல காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பு என்றார்.
தெலங்கானா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் ரேஷன் கடையில் மோடி படம் ஏன் வைக்கவில்லை என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பிய விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் போல் நடந்துக்கொள்ளவில்லை என்றார்.
Also Read: காங்கிரஸ் ஒற்றுமையா தான் இருக்கு.. பா.ஜ.க அரசு மாயையில் ஆட்சி செய்கிறது - கார்த்தி சிதம்பரம்
மேலும் பேசியவர், “மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெலுங்கு பேசுவதை இன்று பார்த்து இருக்கிறேன். பிரதமர் மோடி சொந்த பணத்தில் ரேஷன் அரிசி கொடுக்கிற மாதிரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். நிதி அமைச்சர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை வருத்தமளிக்கிறது எனக் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, FINANCE MINISTER NIRMALA SITHARAMAN, Karthi chidambaram