ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம்...கோயிலில் குவியும் பக்தர்கள்..!

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் நாளை சூரசம்ஹாரம்...கோயிலில் குவியும் பக்தர்கள்..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.30) மாலை 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi (Thoothukudi), India

  திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் நாளை நடைபெற உள்ள சூரசம்ஹாரத்தை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்துள்ளனர்.

  முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர். கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தினமும் யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெற்று வருகிறது.

  இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் சிகர நாளான நாளை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. சூரசம்ஹாரத்தை காண இன்று காலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் முடி காணிக்கை செய்து கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  Read More : தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலையில் தாரகாசூரன் வதம்.! - நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.!

  விழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.30) மாலை நடைபெறும். இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் மற்ற கால பூஜைகளும் நடைபெறும். மாலை 4 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

  தொடர்ந்து, 31-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணியளவில் சுவாமி–அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவமும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  சூரசம்ஹாரம் நடைபெறக்கூடிய பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Soorasamharam, Thiruchendur, Thoothukodi