Home /News /thoothukudi /

தூத்துக்குடியில் பள்ளி பேருந்தில் திடீர் புகை.. அலறியடித்து இறங்கிய மாணவிகள்: 2 பேர் மயக்கம்

தூத்துக்குடியில் பள்ளி பேருந்தில் திடீர் புகை.. அலறியடித்து இறங்கிய மாணவிகள்: 2 பேர் மயக்கம்

புகை ஏற்பட்ட பள்ளி வாகனம்

புகை ஏற்பட்ட பள்ளி வாகனம்

Thoothukkudi | தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த வாகனத்தில் திடீர் புகை ஏற்பட்டது. அந்த புகைமூட்டத்தில் இரண்டு மாணவிகள் மயக்கமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
    தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகிறார்கள். இந்த மாணவிகளை பள்ளி வாகனங்கள் மூலம் தினமும் பள்ளிக்கு அழைத்து வருவது வழக்கம்.

    அந்த வகையில் இன்று காலை குளத்தூர் தருவைகுளம், தாளமுத்து நகர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 80 மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளி வாகனம் வந்து கொண்டிருந்தது. பேருந்து தூத்துக்குடி பூபால் ராயபுரம் அருகே வரும்பொழுது திடீரென்று வாகனத்தில் இருந்து அதிகளவில் புகை வந்துள்ளது.

    இந்த புகைமூட்டம் பேருந்திலும் புகுந்ததால் பேருந்தில் இருந்த 2 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். உடனடியாக வாகனத்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்தி மற்ற மாணவிகளை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டு அருகில் உள்ள வீடு ஒன்றில் அமர வைத்தார். மயக்கமடைந்த இரண்டு மாணவிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Also see... வளரும் நெற்குதிர்கள்?... திருச்சியில் ஓர் அதிசயம்!

    பள்ளி வாகனத்தில் திடீரென்று கட்டுக்கடங்காத புகை ஏற்பட்டு மாணவிகள் மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bus, Quit Smoking, School students, Thoothukudi

    அடுத்த செய்தி