ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

போலி போராளிகளை கைது செய்ய கோரி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் புகார் மனு

போலி போராளிகளை கைது செய்ய கோரி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் புகார் மனு

போலி போராளிகளை கைது செய்ய கோரி ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கிராம கூட்டமைப்பினர்

போலி போராளிகளை கைது செய்ய கோரி ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கிராம கூட்டமைப்பினர்

Thoothukudi | அப்பாவி மக்களை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூண்டிவிட்ட போலி போராளிகளை கைது செய்ய வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு கிராம கூட்டமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

தூத்துக்குடியைச் சேர்ந்த ஹஸிமா என்ற வழக்கறிஞர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ்,  தூத்துக்குடி மாவட்டத்தில் காற்று மாசுபாடு காரணமாக எந்த வகையான புற்றுநோய் உருவாகிறது? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,  காற்று மாசுபாடு காரணமாக எந்த வகையான புற்றுநோயும் உருவாகவில்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதை எடுத்து ஸ்டெர்லைட் ஆதரவு கிராம கூட்டமைப்பினர், கடந்த 2018 ஆம் ஆண்டு காற்று மாசுபாடு காரணமாக தூத்துக்குடியில் புற்றுநோய் ஏற்படுவதாக பொய்யான தகவலை கூறி அப்பாவி பொதுமக்களை மூளை சலவை செய்து தூண்டிவிட்டு நடத்திய கலவரத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Also see... முதல் நாளில் அமோக வரவேற்பு பெற்ற இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம்

இந்த கலவரத்திற்கு காரணமான பேராசிரியர் பாத்திமா பாபு, நித்தியானந்தன் ஜெயராம், மெரினா பிரபு, குமரெட்டியாபுரம் மகேஷ், கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தி, ஹரிராகவன், தெர்மல் ராஜா உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினர் அளித்த புகார் மனு

மேலும்   ‘சீனாவிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு இந்த போலி போராளிகள் அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விட்டுள்ளனர்’ என்றும் குற்றம் சாட்டினர்.

செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

First published:

Tags: Sterlite, Thoothukudi