ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : முதல்வர் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது - உயிரிழந்த மாணவி ஸ்னோலின் தாய் பேட்டி

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு : முதல்வர் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது - உயிரிழந்த மாணவி ஸ்னோலின் தாய் பேட்டி

உயிரிழந்த மாணவியின் தாய்

உயிரிழந்த மாணவியின் தாய்

Thoothukudi Gun Shoot | ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வனிதா நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi, India

  ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஸ்னோலினின் தாய் வனிதா நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். மேலும், தாமதப்படுத்தாமல் விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிவாரணமாக மேலும் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

  இதையும் படிங்க : 12 மணிக்கு 10 லட்சம் கிரெடிட்.. 2 மணிக்கு 5 லட்சம் மாயம் - வங்கியில் லோன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

  இந்நிலையில், சட்டமன்றத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவி ஸ்னோலினின் தாய் வனிதா நியூஸ் 18 தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

  அப்போது அவர் கூறுகையில், “தாமதப்படுத்தாமல் சாத்தான்குளம் சம்பவத்தில் எப்படி விரைவாக நடவடிக்கை எடுத்தனரோ அதேபோன்று ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சிறையில் அடைக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையையும் நிரந்தரமாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

  மேலும், 5 லட்ச ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறித்து கருத்து தெரிவித்த அவர் “எங்களுக்கு பணம் முக்கியம் கிடையாது.  நீதி, நியாயம் உடனடியாக கிடைக்க வேண்டும்” என்று தெரிவித்தார் .

  செய்தியாளர் : பி.முரளிகணேஷ் - தூத்துக்குடி

  Published by:Karthi K
  First published:

  Tags: Thoothukudi, Thoothukudi gun shoot, Thoothukudi Sterlite