ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

பெண் எஸ்.ஐக்கு காவல் நிலையத்தில் நடந்த வளைகாப்பு விழா : கோவில்பட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!

பெண் எஸ்.ஐக்கு காவல் நிலையத்தில் நடந்த வளைகாப்பு விழா : கோவில்பட்டியில் நெகிழ்ச்சி சம்பவம்!

கோவில்ப்பட்டி காவல்நிலையத்தில் வளைகாப்பு விழா

கோவில்ப்பட்டி காவல்நிலையத்தில் வளைகாப்பு விழா

baby shower Function in Kovilpatti in police station | கர்ப்பிணியான உதவி ஆய்வாளர் அருள்மொழிக்கு கோவில்பட்டி  கிழக்கு காவல் நிலையத்தில் போலீசார் வளைகாப்பு விழா நடத்தினர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் உதவி காவல் ஆய்வாளருக்கு வளைகாப்பு விழா நடைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அருள்மொழி. இவருடைய கணவர் சதீஷ்குமார்  கழுகுமலை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

கர்ப்பிணியான உதவி ஆய்வாளர் அருள்மொழிக்கு கோவில்பட்டி  கிழக்கு காவல் நிலையத்தில் போலீசார் வளைகாப்பு விழா நடத்தினர். இதில் அருள் மொழியின் கணவர் சதீஷ்குமார் கலந்துகொண்டார்.

காவல்நிலையத்தில் நடைபெற்ற வளைகாப்பு விழா

இந்த நிகழ்ச்சில் கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சூர்ஜித் ஆனந்த் உட்பட சகல காவலர்கள் பங்கேற்று வாழ்த்தினார்

First published:

Tags: Kovilpatti, Local News