ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்காதலன்.. கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்த மகன்கள்!

தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்காதலன்.. கிரைண்டர் கல்லைப்போட்டு கொலை செய்த மகன்கள்!

கொலை செய்தவர்

கொலை செய்தவர்

விசாரணையில் 7 வருடங்களுக்கு முன் அவரது கணவர் இறந்தவுடன், கணேசனுடன் வீரவாஞ்சி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India

தாய்க்கு கொலைமிரட்டல் விடுத்த கள்ளக்காதலனை மகன் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கோவில்பட்டி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் 42 வயதான கணேசன். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தண்ணீர் விற்பனை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி சித்ரா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கண்மாயில் காயங்களுடன் கணேசன் இறந்து கிடந்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற கோவில்பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். கணேசனின் மனைவி சித்ராவிடம் விசாரித்த போது கணேசனுக்கும், வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அந்தப் பெண் வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி 40 வயதான துரைச்சி என்பது தெரியவந்தது. அவருக்கு பாண்டி உட்பட 3 மகன்கள் உள்ளனர். 7 வருடங்களுக்கு முன் அவரது கணவர் இறந்தவுடன், கணேசனுடன் வீரவாஞ்சி தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.

துரைச்சியின் செல்போனை, சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர் நாகர்கோவில் அருகே பழவூரில் இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற கோவில்பட்டி போலீசார், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த துரைச்சி மற்றும் அவரது மகன்களைப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்குத் தெரியவந்தன. 7 வருடங்களுக்கு முன் துரைச்சிக்கும், கணேசனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சிறுவர்களாக இருந்த அவரது மகன்கள், விவரம் அறியாமல் இருந்து வந்தனர். தற்போது மூத்தமகன் பாண்டி மற்றம் அவரது தம்பிகளுக்கு விவரம் தெரிந்து. இதையடுத்து தாயையும், கணேசனையும் மகன்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் கணேசனை விட்டு துரைச்சி விலகத் தொடங்கினார். ஆனால் இதை கணேசன் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த வியாழக்கிழமை இரவு துரைச்சி வீட்டுக்கு வழக்கம் போல் சென்ற கணேசன், மகன்கள் முன்னிலையிலேயே அவரை தனியாக தன்னுடன் இருக்க வற்புறுத்தினார். இதற்கு துரைச்சியின் மகன்கள் எதிர்ப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த கணேசன் துரைச்சியை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். அதன் பின்னர் அவர் மது போதையில் தூங்கி விட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டி மறுநாள் அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் கிடந்த கிரைண்டர் கல்லை தூங்கிக் கொண்டிருந்த கணேசன் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பாண்டியும் அவரது சகோதரரும் கணேசனின் உடலை பைக்கில் ஏற்றிச் சென்று ஆலம்பட்டி கண்மாயில் வீசிச் சென்றனர். இதையடுத்து தாயிடம் கொலை செய்ததைக் கூறிய பாண்டி அவரை அழைத்துக் கொண்டு பழவூர் தப்பிச் சென்றது தெரியவந்தது.

இந்த தகவல்களை அறிந்த போலிசார், தாய் மற்றும் மகன்கள் என மூவரையும் கைது செய்தனர்.

First published:

Tags: Crime News, Kovilpatti, Murder case