ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

ஹோட்டலில் புகுந்து சமூக ஆர்வலரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்... தூத்துக்குடியில் பட்டப்பகலில் பரபரப்பு..

ஹோட்டலில் புகுந்து சமூக ஆர்வலரை சரமாரியாக வெட்டிய மர்ம கும்பல்... தூத்துக்குடியில் பட்டப்பகலில் பரபரப்பு..

வெட்டப்பட்ட சமூக ஆர்வலர்

வெட்டப்பட்ட சமூக ஆர்வலர்

Thoothukudi Crime News : தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத கஞ்சா விற்பனையை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சி செய்யும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடியில் ஹோட்டலில் புகுந்து சமூக ஆர்வலரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, காயல்பட்டினம் பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனையை தடுக்க வலியுறுத்தியும், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்களை காவல்துறை கைது செய்ய கோரி கோரியும் கடந்த ஆண்டு ஆறுமுகநேரி பஜாரில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலை ஆதவா அறக்கட்டளை தொண்டு நிறுவன உரிமையாளர் பாலகுமரேசன் முன்னின்று நடத்தினார். இந்த போராட்டத்தை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாலகுமரேசன் நடத்திய பால்பண்ணைக்கு மர்ம கும்பல் தீ வைத்தனர். இந்த வழக்கில் காவல்துறை நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்தது.

இதையும் படிங்க : 3 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளம்தம்பதி எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடியில் அதிர்ச்சி..!

இந்நிலையில், நேற்று இரவு ஒரு மர்ம கும்பல் பாலகுமரேசன் நடத்தி வரும் உணவகத்திற்குள் புகுந்து அவரை கொலை செய்யும் நோக்கில் கத்திய உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது நெல்லை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே பாலகுமரேசனை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : முரளி கணேஷ் - தூத்துக்குடி

First published:

Tags: Crime News, Local News, Thoothukudi