முகப்பு /செய்தி /தூத்துக்குடி / குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

குறைந்த செலவில் மாலத்தீவுக்கு கடல் போக்குவரத்து... தூத்துக்குடியில் துறைமுக அதிகாரி தகவல்..!

மாலத்தீவு

மாலத்தீவு

Maldives Travel : தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு குறைந்த செலவில் தோணி (சிறிய சரக்கு கப்பல்) மூலம் சரக்குகளை அனுப்புவதற்கு பல்வேறு கட்டண சலுகைகள் விரைவில் அளிக்கப்படும் என மாலத்தீவு துறைமுக தலைமை செயல் அதிகாரி தகவல்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் இருந்து பல ஆண்டுகளாக மாலத்தீவு, அந்தமான், லட்சத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தோணிகள் மூலம் காய்கறிகள், உணவுப் பொருட்கள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும், தூத்துக்குடியில் இருந்து 17 தோணிகள் மூலம் மாலத்தீவு மற்றும் மாலத்தீவு அருகே உள்ள மற்ற தீவுகளுக்கும் சரக்குகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மாலத்தீவு துறைமுகத்தில் சரக்குகள் இறக்குவதற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால் தூத்துக்குடி தோணி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து தூத்துக்குடி தோனி உரிமையாளர் சங்கத்தினர் மாலத்தீவு சென்று மாலத்தீவு துறைமுக அதிகாரிகளுடன்  துறைமுகத்தில் கட்டண சலுகைகளை அளிக்கக்கோரி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்று மாலத்தீவு துறைமுக தலைமை செயல் அதிகாரி சாகித் அலி தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி வந்து தோணி உரிமையாளர் சங்க தலைவர் மெக்கன்னா தலைமையில் தோணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாலத்தீவு துறைமுக தலைமை செயல் அதிகாரி சாகித் அலி தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விரைவில் தோணிகளுக்கான கட்டண சலுகைகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் : முரளிகணேஷ் - தூத்துக்குடி

First published:

Tags: Local News, Maldives, Thoothukudi, Travel