ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

என் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு - சசிகலா புஷ்பா கணவர் போலீசில் பகீர் புகார்

என் மனைவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு - சசிகலா புஷ்பா கணவர் போலீசில் பகீர் புகார்

வைரலான காட்சி

வைரலான காட்சி

சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த பாஜக நிர்வாகி பொன் கணபதியை கைது செய்ய வேண்டும் என அவரது கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Thoothukkudi (Thoothukudi) | Tamil Nadu

  பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக பொதுச்செயலாளர் பொன்.பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

  தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 ஆவது நினைவு தினம் கடந்த 11-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த இருந்தனர்.

  இவ்விழாவில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்பியும், மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

  அப்போது, சசிகலா புஷ்பாவிடம் பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன். பால கணபதி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் பொன் கணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில், சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, பொன் கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.பாலாஜி சரவணனிடம் இ மெயில் மூலமாக புகார் அளித்துள்ளார். அதில், தன் மனைவி சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த பாஜக நிர்வாகி பொன் கணபதியை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

  செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: BJP, Sasikala Pushpa, Viral Video