ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

12 மணிக்கு 10 லட்சம் கிரெடிட்.. 2 மணிக்கு 5 லட்சம் மாயம் - வங்கியில் லோன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

12 மணிக்கு 10 லட்சம் கிரெடிட்.. 2 மணிக்கு 5 லட்சம் மாயம் - வங்கியில் லோன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் க்ரைம் போலீசார்

இழந்த பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் க்ரைம் போலீசார்

Thoothukkudi | தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கியில் கடனாக பெற்ற ரூ 10 லட்சத்தில் மொபைல் பேங்கிங் மூலம் ரூ.5 லட்சம் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

    தூத்துக்குடி மதுரா கோட்ஸ் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணமுருகன்.  இவர் ஸ்ரீ வாரி டெக்னிக்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பொருள் விநியோகம் செய்து வந்துள்ளார். அதற்காக அனல்மின் நிலைய கனரா வங்கி கிளையில் நடப்பு கணக்கின் கீழ்  Bill Discount Scheme என்ற லோன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். 14.09.2022 அன்று பகலில் 12.19 மணிக்கு மேற்படி சரவணமுருகன் என்பவரது வங்கி கணக்கிற்கு லோன் தொகை ரூபாய் 10 லட்சம் கிரெடிட் ஆகியுள்ளது.

    ஆனால் அன்றைய தினத்திலேயே மதியம் 02.53 மணிக்கு ரூபாய் 5,000/-, 02.55 மணிக்கு ரூபாய் 1/-, 02.56 மணிக்கு ரூபாய் 4,94,990/- என்று மொத்தம் ரூபாய் 4,99,991/- பணம் சரவணமுருகன் அனுமதியின்றி வங்கி கணக்கிலிருந்து டெபிட் ஆகியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணமுருகன் மேற்படி கனரா வங்கி சென்று தனது பணம் ரூபாய் 4,99,991/- டெபிட் ஆனது தொடர்பாக விசாரித்தபோது Mobile Banking மூலமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வங்கியில் இருந்து தெரிவித்துள்ளனர்.

    ஆனால் சரவணமுருகன் Mobile Banking, Internet Banking எதுவும் பயன்படுத்தவில்லை என்பதாலும், அவருக்கு தெரியமாலும் அவரின் அனுமதியின்றியும் மொத்தமாக ரூபாய் 4,99,991/-பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால், ஏமாற்றிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து இழந்த தனது பணத்தை மீட்டுத் தரும்படி National cybercrime Portal என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார்.

    மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சைபர் குற்றப் பிரிவு காவல் சிவசங்கரன் மற்றும் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு,  கனரா வங்கிக்கு விபரங்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியதன் அடிப்படையில் வங்கியிலிருந்து நடவடிக்கை மேற்கொண்டு சரவணமுருகன் இழந்த பணம் அவருக்கு தெரியாமல் சென்றுள்ளதால் காப்பீடு மூலமாக இழந்த பணத்தை சரவணமுருகனின் கணக்கிற்கு வங்கியிலிருந்து திரும்ப வரவு வைக்கப்பட்டுள்ளது.

    Also see... சென்னையில் 9-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை...

    மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் சரவணமுருகனை நேற்று (17.10.2022) நேரில் அழைத்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினார்.  இழந்த பணத்தை மீட்டுக்கொடுத்த சைபர் குற்ற பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

    செய்தியாளர்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Canara Bank, Cheating case, Cyber crime, Thoothukodi