முகப்பு /செய்தி /தூத்துக்குடி / நெல்லையில் கொள்ளையடித்து திரும்பும்போது விபத்து.. போலீசில் வசமாக சிக்கிய கொள்ளை கும்பல்

நெல்லையில் கொள்ளையடித்து திரும்பும்போது விபத்து.. போலீசில் வசமாக சிக்கிய கொள்ளை கும்பல்

மாதிரி படம்

மாதிரி படம்

Thoothukudi News : திருநெல்வேலியில் இருந்து கொள்ளையடித்துவிட்டு தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது ஏற்பட்ட விபத்தில் கொள்ளை கும்பல் சிக்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

திருநெல்வேலி மாவட்டம் வி.எம்.சத்திரம் ஜான்சிராணி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவர் தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு ராமசாமி தனது குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அவர்களை கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 50 சவரன் நகை மற்றும் செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளை அடித்து தப்பியது. பின்னர் கொள்ளையடித்த 5 பேரும் 2 இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி வந்துள்ளனர்.

அப்போது புதுக்கோட்டை அருகே ஒரு இருசக்கர வாகனம் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் கொள்ளையர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளது. நெல்லையில் கொள்ளை நடந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து தென்பாகம் காவல் ஆய்வாளர் கங்கை நாத பாண்டியன் தலைமையிலான காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த கொள்ளை கும்பல் தப்பி ஓட முயன்றது. இதையடுத்து, அந்த கொள்ளை கும்பலை போலீசார் விரட்டி பிடித்து கைது செய்தனர். ஆனால் அதில் ஒருவன் தப்பிவிட்டான். விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டது தூத்துக்குடியை சேர்ந்த முத்து, கண்ணன், சில்வர் ஸ்டார், கிஷோர், சம்சுதீன் என்பது தெரியவந்தது. இதில் படுகாயம் அடைந்த முத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read:  திருடுவதற்கு பஸ்சில் மட்டுமே போகும் கொள்ளையன்.. சிக்கும் பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசம் - பலே திருடன் கைது

மேலும் தப்பி ஓட முயன்ற கண்ணன், சில்வர் ஸ்டார், கிஷோர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய சம்சுதீனை போலீசார் தேடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கொள்ளை கும்பலிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 50 பவுன் நகைகள் செல்போன்  மட்டும் இருசக்கர வாகனங்கள்உள்ளிட்ட பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நெல்லையில் கொள்ளையடித்து விட்டு விபத்தில் சிக்கி கொள்ளை கும்பல் கொள்ளையடித்த சில மணி நேரங்களையே தூத்துக்குடியில் காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் : முரளிகணேஷ் - தூத்துக்குடி

First published:

Tags: Crime News, Local News, Tamil News, Thoothukudi