ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

'வாழ்த்துகள்'.. திடீரென மேடையில் ஒலித்த ரஜினி குரல்.. மகிழ்ச்சியில் திகைத்த கர்ப்பிணிகள்!

'வாழ்த்துகள்'.. திடீரென மேடையில் ஒலித்த ரஜினி குரல்.. மகிழ்ச்சியில் திகைத்த கர்ப்பிணிகள்!

கர்ப்பிணி பெண்களுக்கு  வாழ்த்து சொல்லிய ரஜினிகாந்த்

கர்ப்பிணி பெண்களுக்கு வாழ்த்து சொல்லிய ரஜினிகாந்த்

thoothukudi rajinikanth | நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் நடந்த 73 கர்பிணிபெண்கள் வளைகாப்பு விழாவில் கலந்து கொண்ட கர்ப்பிணிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்போன் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

தூத்துக்குடியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் வாழ்த்து தெரிவித்த ஆடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில், நடிகர் ரஜினிகாந்தின் 73 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் 73 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட பெண்களுக்கு சேலை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் கர்ப்பிணிகளுக்கு செல்போன் மூலம் வாழ்த்து கூறிய ஆடியோ மேடையில் ஒளிபரப்பப்பட்டது. இதனால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Also see... ''ஆள வைத்தவரும்.. அடையாளம் காட்டியவரும் பெரியப்பாதான்..'' அன்பழகன் குறித்து மேடையில் உருகிய முதல்வர் ஸ்டாலின்!

இதன் பிறகு கர்ப்பிணிகளுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள ஒருங்கிணைந்த ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களும், நடிகர் ரஜினியின் ரசிகர்களும் கலந்துகொண்டனர்.

செய்தியாளார்: பி.முரளிகணேஷ், தூத்துக்குடி

First published:

Tags: Local News, Pregnancy, Rajinikanth, Thoothukudi