ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

மசோதாக்களில் ஆளுநர் உடனடியாக கையெழுத்து போடவேண்டும் என்ற விதி கிடையாது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

மசோதாக்களில் ஆளுநர் உடனடியாக கையெழுத்து போடவேண்டும் என்ற விதி கிடையாது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

தமிழிசை

தமிழிசை

ஆளுநர் என்றால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் உடனடியாக மசோதாவில் கையெழுத்து போட வேண்டும் என்பது இல்லை. இதை காலதாமதம் என்று எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India

மசோதாக்களில் ஆளுநர் உடனடியாக கையெழுத்து போடவேண்டும் என்ற விதி கிடையாது எனவும், ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூறுவது ஏற்புடையது அல்ல எனவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஒரு ஆளுநருக்கு மசோதா வந்தால் உடனே கையெழுத்து போட்டு தான் ஆக வேண்டும் என்பது போல எந்த விதியும் கிடையாது. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் அதற்கான ஆலோசனை செய்வதற்கான நேரம் எடுத்துக் கொள்கின்றனர். ஆளுநர் என்றால் எந்தவித சந்தேகமும் இல்லாமல் உடனடியாக மசோதாவில் கையெழுத்து போட வேண்டும் என்பது இல்லை. இதை காலதாமதம் என்று எடுத்துக் கொள்ள முடியாது” என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  எங்களுக்கு பின் கட்சியில் வந்தவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி விட்டனர் - ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு

மேலும் தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்து ஆளுநர் என்ற அடிப்படையில் உங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநரை திரும்பப் பெறுவது என்று கேட்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்பது எனது கருத்து. இந்த கருத்திற்கு சமூக வலைதளத்தில் எனக்கு இப்போது விமர்சனம் வரும் ஒரு ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர். அவரை வேண்டும் என்றும் வேண்டாம் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கக் முடியாது. இது ஜனநாயக நாடு. இதற்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என பதிலளித்தார்.

திருவண்ணாமலை தீப தொடக்க விழாவின் முக்கிய நிகழ்வான பஞ்சரத்ன கீர்த்தனையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழக ஆளுநர் RN.ரவியும் பங்கேற்க உள்ளனர் என்பது குற்ப்பிடத்தக்கது.

First published:

Tags: Dr tamilisai soundararajan, Governor, RN Ravi, Tamilisai Soundararajan, Thoothukudi