முகப்பு /செய்தி /தூத்துக்குடி / தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

தனியார் நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கு வருகின்றன - இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன்

Thoothukudi News : பல புதிய நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கும், சாட்டிலைட் உருவாக்குவதற்கும்,  அப்ளிகேஷன் உருவாக்குவதற்கும் வருகின்றனர். சந்திராயன் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சொல்கிறார்.

  • Last Updated :
  • Thoothukkudi, India

தனியார் ராக்கெட் ஏவியதையடுத்து பல புதிய நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கும், சாட்டிலைட் உருவாக்குவதற்கும் வருகின்றனர் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், “தனியார் ராக்கெட் விட்டுள்ளது ரொம்ப நல்ல காரியம்.  இது தொடக்கம் தான். மென்மேலும் பெரிய ராக்கெட் விடுவது அவர்களுக்கு  சந்தோஷமாக இருக்கிறது.

இதனால் பல புதிய நிறுவனங்கள் ராக்கெட் உருவாக்குவதற்கும், சாட்டிலைட் உருவாக்குவதற்கும்,  அப்ளிகேஷன் உருவாக்குவதற்கும் வருகின்றனர். சந்திராயன் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சொல்கிறார்.

இதையும் படிங்க : சென்னைக்கு அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : திங்கள், செவ்வாய் கிழமைகளில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை!

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கான நிலம் கையெடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இனி ராக்கெட் ஏவுதளம் உருவாக்குவதற்கான பணிகள் தொடங்குவார்கள். முதலில் டிசைன் வேலை பார்த்து விட்டு, மண் பரிசோதனைக்கு பிறகு ராக்கெட் ஏவுதளம் உருவாக்கும் பணிகள் தொடங்கும்” என்றார்.

top videos

    செய்தியாளர் : முரளிகணேஷ் - தூத்துக்குடி

    First published:

    Tags: ISRO, Thoothukudi