ஹோம் /நியூஸ் /தூத்துக்குடி /

பொங்கல் பண்டிகை : தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு ஏற்றுமதியாகும் மஞ்சள்குலை

பொங்கல் பண்டிகை : தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு ஏற்றுமதியாகும் மஞ்சள்குலை

அறுவடை

அறுவடை

Thoothukkudi News : முதல் கட்டமாக அறுவடை செய்யப்பட்ட மஞ்சள்குலை மும்பைக்கு அனுப்பப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi (Thoothukudi), India

பொங்கல் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மஞ்சள்குலை அறுவடை முழுவீச்சல் நடந்து வருகிறது.

பொங்கல் பண்டிகையின் போது புதுப்பானையில் பொங்கலிடும் போது மஞ்சள்குலை, கரும்பு ஆகியவற்றை படைத்து மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். பொங்கல் பண்டிகையில் முக்கிய அங்கம் வகிக்கும் மஞ்சள் குலையை தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம், தங்கம்மாள்புரம், சக்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதியில் ஆண்டு தோறும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஆடிமாதம் மஞ்சள் பயிரிட்ட இவர்களுக்கு இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் மஞ்சள் நன்கு விளைச்சல் இருந்த போதும் குலை உயரம் குறைவான அளவே விளைச்சல் கிடைத்துள்ளது. பொங்கல் பண்டிகை இன்னும் 4 தினமே உள்ள நிலையில் தற்போது முழுவீச்சில் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. இன்று அறுவடை செய்யப்பட்ட மஞ்சள்குலைகள் முதல் கட்டமாக மும்பைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இன்று மாலையும் நாளையும் நடைபெறும் அறுவடை தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஆறுமுகநேரி, முக்காணி, ஏரல், தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தான்குளம் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

செய்தியாளர் :  பி.முரளிகணேஷ் ( தூத்துக்குடி)

First published:

Tags: Local News, Pongal, Tamil News, Thoothukudi, Turmeric