Home /News /thoothukudi /

குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாலைமறியல்... தந்தையிடம் இருந்து சிறுவர்களை மீட்ட போலீஸ்

குழந்தைகளை கட்டாயப்படுத்தி சாலைமறியல்... தந்தையிடம் இருந்து சிறுவர்களை மீட்ட போலீஸ்

கோவில்பட்டியில் குழந்தைகளை தந்தையிடம் இருந்து காப்பாற்றிய போலீசார்..

கோவில்பட்டியில் குழந்தைகளை தந்தையிடம் இருந்து காப்பாற்றிய போலீசார்..

Kovilpatti | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது 2 குழந்தைகளை கட்டயப்படுத்தி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தந்தையின் பிடியில் இருந்து 2 குழந்தைகளும் தப்பிக்க முயன்ற சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க செய்ததது. போலீசார் விரைந்து வந்து 2 குழந்தைகளையும் மீட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kovilpatti, India
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஐ.டி.ஐ படித்துள்ள இவர் சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு தற்போது இங்கு கிடைக்கும் வேலைக்கு செல்வதும், சில நாள்கள் வேலைக்கு செல்லாமலும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி வேலம்மாள் என்ற மனைவியும், தமிழரசன், கௌதம் என்ற 2 மகன்கள் உள்ளனர். தமிழரசன் 4ம் வகுப்பும், கௌதம் 1ம் வகுப்பு படித்து வருகின்றனர். கோபால கிருஷ்ணன் சரிவர வேலைக்கு செல்லவில்லை என்பதால் அவரது மனைவி வேலம்மாள் கடலைமிட்டாய் கம்பெனியில் வேலை பார்த்து தனது குடும்பத்தினை காப்பாற்றி வருகிறார்.

    மேலும் கோபாலகிருஷ்ணணுக்கு சொந்த ஊரில் சொத்து தொடர்பாக பிரச்சினை இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் இன்று திடீரென தனது 2 குழந்தைகளை அழைத்து கொண்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவருடைய 2 குழந்தைகளும் சாலையில் அமராமல் கண்ணீருடன் கதறிக் கொண்டு தனது தந்தையின் பிடியில் இருந்து விலகி செல்ல முயன்றனர். இருந்த போதிலும் கோபால கிருஷ்ணன் 2 குழந்தைகளை விடாப்பிடியாக பிடித்து கொண்டு சாலையில் உக்கார வைக்க முயன்றார். அதற்குள்ளாக போலீசார் விரைந்து வந்து கோபாலகிருஷ்ணன் மற்றும் 2 குழந்தைகளையும் கோட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர்.

    இதையெடுத்து கோபாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினார். கோபாலகிருஷ்ணன் முன்னுக்கு பின்னாக பேசிக்கொண்டு இருந்தார். உங்கள் பிரச்சினையை புகார் மனுவாக எழுதி கொடுங்கள் கோட்டாட்சியரிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்போம் என்று போலீசார் கூறினர். எனினும் அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    Also see... கரூரில் ஜோராக நடக்கும் கஞ்சா பிசினஸ்.. காவல் துறை அதிரடி

    இதனை தொடர்ந்து கோபாலகிருஷ்ணன் மனைவி வேலம்மாளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்தார். அவரிடம் போலீசார் குழந்தைகளை ஒப்படைத்தனர். மேலும் கோபாலகிருஷ்ணனை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தினால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர்:  மகேஷ்வரன், கோவில்பட்டி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Kovilpatti, Thoothukudi

    அடுத்த செய்தி