Home /News /thoothukudi /

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலை மாற்றும் திட்டங்கள் துவக்கப்பட உள்ளன: அமைச்சர் சேகர் பாபு

திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலை மாற்றும் திட்டங்கள் துவக்கப்பட உள்ளன: அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

Thoothukkudi | தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை வருகின்ற 28ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
    திருச்செந்தூர் சுப்ரமணியசாமி திருக்கோவிலில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை வருகின்ற 28ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்ட உள்ளார். அதனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசிய போது, “  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் கோயிலை மாற்றுவதற்கான பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. தனியார் பங்களிப்புடன் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் துவங்கப்பட உள்ளது.

    அதற்கான பல்வேறு கட்ட ஆய்வுப் பணிகள் நடைபெற்றன. மேலும் இந்த திட்டப்பணிகள் நடைபெறுவது குறித்தும் என்னென்ன மாதிரியான பணிகள் நடைபெறும் என்பது குறித்தும் அதிகாரியுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோயிலில் பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

    Also see... Also see... கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு..

    அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் சுமார் 300 கோடி மதிப்பிலாக தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற உள்ளது. மேலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு திருபணிகள் நடைபெற உள்ளது. இந்த அனைத்து பணிகளின் துவக்க நிகழ்ச்சி வருகிற 28ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக இந்த திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளார். இதன் தொடர்ச்சியாக விரைவாக இந்த கோயிலில் அனைத்து திட்டம் பணிகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் அடுத்துள்ள குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் நடைபெறவுள்ள தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்தும் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில் இந்து அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர்: முரளிகணேஷ், தூத்துக்குடி
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CM MK Stalin, Minister Sekar Babu, Thoothukudi, Tiruchendur

    அடுத்த செய்தி