Home /News /thoothukudi /

விதிகளை மீறி கரிசல் மண் பயன்படுத்தி அமைக்கப்படும் சாலை... கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர்..

விதிகளை மீறி கரிசல் மண் பயன்படுத்தி அமைக்கப்படும் சாலை... கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர்..

களிமண் சாலை அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய கோவில்பட்டி மக்கள்

களிமண் சாலை அமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய கோவில்பட்டி மக்கள்

Tuticorin - Kovilpatti | தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அரசின் விதிமுறைகளை பின்பற்றமால் கரிசல் மண்ணை பயன்படுத்தி புதிய சாலை அமைத்து வருவதை கண்டித்து கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் கையில் கரிசல் மண்ணை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thoothukkudi, India
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வெயிலுகாந்தபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், வெயிலுகாந்தபுரம் - சங்கரலிங்கபுரத்தில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு, அதிலிருந்த கிடைத்த கரிசல் மண்ணை பயன்படுத்தி சாலை அமைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள தொழிலாளர்களை பயன்படுத்தாமல், பொக்லைன் இயந்திரம் மூலம் சாலை பணி நடைபெற்று வருகிறது. எனவே, முறைகேடான சட்ட விரோத ஊழல் செய்ய இந்த சாலை அமைக்கப்படுவதாகவும் கரிசல் மண் கொண்டு சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் எனவும் அந்த பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

மேலும் செம்மண் மற்றும் சரளை மண் கொண்டு சாலையை  சீர்படுத்த வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், தேசிய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில், சாலை அமைக்க பயன்படுத்தப்படும் கரிசல் மண்ணை கையில் ஏந்தியபடி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜாவிடம் புகார் மனுவை அளிக்கும் கோவில்பட்டி மக்கள்


Also see... மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது...

பின்னர், கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜாவிடம் அளித்தனர்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Kovilpatti, Protest, Road Safety

அடுத்த செய்தி